thumbnail

அண்ணாமலையார் கோயில் வசந்த உற்சவம் முதல் நாள்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்! - arunachaleswarar temple

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 15, 2024, 4:23 PM IST

திருவண்ணாமலை: திருவண்ணாமலை நகரில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகின்ற அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் முதல் நாள் விழா விமர்சையாக நடைபெற்றது.

சித்திரை வசந்த உற்சவத்தை முன்னிட்டு, உண்ணா மலையம்மன் உடனாகிய அண்ணாமலையார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, வெட்டிவேர் பல்லக்கில் அமர்ந்தபடி மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ள நான்கு கால் மண்டபத்தில் பொம்மை பூ கொட்டும் நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் 10 நாட்கள் சித்திரை வசந்த உற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு சித்திரை வசந்த உற்சவத்தின் முதல் நாளான நேற்று அண்ணாமலையாருக்குச் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று பூ மாலை அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, அண்ணாமலையார் வெட்டிவேர் பல்லக்கில் எழுந்தருளி மூன்றாம் பிரகாரத்தில் உள்ள நான்கு கால் மண்டபத்தில் பொம்மை பூ போடும் நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து, மகிழ மரத்தைச் சுற்றி பத்து முறை அண்ணாமலையார் உண்ணாமலையம்மன் வெட்டிவேர் பல்லக்கில் எழுந்தருளிச் சுற்றி வந்து பக்தர்களுக்குக் காட்சி அளித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.