சாப்பாடு எப்படி இருக்கு..? அரசுப் பள்ளியில் நெல்லை ஆட்சியர் திடீர் விசிட்..! - palavoor tirunelveli
🎬 Watch Now: Feature Video
Published : Feb 2, 2024, 12:20 PM IST
திருநெல்வேலி: தமிழக முதலமைச்சர் அறிவித்த படி, "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற திட்டத்தின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட ஆட்சியர்கள் அரசுத் திட்டப் பணிகளை நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். அந்த வகையில், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் மாவட்டம் முழுவதும் நேற்று (பிப்.1) ஒரு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
அதன்படி, அவர் காலை முதல் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசுப் பள்ளிகள், கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் ஆகிய அரசு நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் வட்டம் பழவூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆய்வுக்குச் சென்றார். அப்போது அங்கிருந்த அரசு பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார். பின்னர், சமையல் கூடத்திற்குச் சென்று மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரத்தை சாப்பிட்டு ஆய்வு செய்தார்.
இதனையடுத்து மதிய உணவு இடைவெளியில் உணவருந்திக் கொண்டிருந்த மாணவர்களுடன் மாவட்ட ஆட்சியர் தரையில் அமர்ந்து கலந்துரையாடி, ஒவ்வொரு மாணவர்களின் பெயர் விவரங்களையும் விசாரித்து, சாப்பாடு நன்றாக இருக்கிறதா? எனக் கேட்டறிந்தார். மேலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் குறித்தும் மாணவர்களிடையே கேட்டறிந்தார்.