தேனி ஸ்ரீ ருத்ர காளி திருக்கோயில் கும்பாபிஷேகம்; திரளான பக்தர்கள் தரிசனம்! - Theni Sri Ruthra Kaliamman Temple - THENI SRI RUTHRA KALIAMMAN TEMPLE
🎬 Watch Now: Feature Video
Published : Jul 7, 2024, 3:41 PM IST
தேனி: தேனி அருகே பழனிச்சட்டிப்பட்டியில் புதிதாக கட்டப்பட்ட அருள்மிகு ஸ்ரீ ருத்ர மகா காளி திருக்கோயில் குடமுழுக்கு விழா இன்று நடைபெற்றது. முன்னதாக, கோயில் வளாகம் அருகே யாகசாலை அமைக்கப்பட்டு யாக குண்டங்களில் பலவித மூலிகைப் பொருட்கள் கொண்டு பூஜைகள் நடத்தப்பட்டன.
இதனைத் தொடர்ந்து கலச நீருக்கு பூஜைகள் செய்யப்பட்டு பஞ்ச கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. அடுத்ததாக மேளம், நாதஸ்வரம் முழங்க கடம் புறப்பாடு தொடங்கியது. சிவாச்சாரியார்கள் புனித கலச நீரை தலையில் சுமந்து கொண்டு, கோயில் வளாகத்தைச் சுற்றி வந்து விமான கலசத்தை அடைந்தனர்.
அங்கு ஐந்து கோபுர கலசங்களுக்கு மாலைகள் அணிவித்து பூஜைகள் செய்த பின், புனித கலச நீரை ஊற்றி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. பின்னர் கலசங்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டு, அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் மீது புனித கலச நீர் தெளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, மூலவர் ருத்ர மகா காளிக்கு புனித கலச நீரை ஊற்றி பஞ்ச கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. இதில் அப்பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேக நிகழ்ச்சியைக் கண்டு தரிசித்துச் சென்றனர்.