ஆனி மாத பிரதோஷம்; அண்ணாமலையார் கோயில் பெரிய நந்திக்கு சிறப்பு அபிஷேகம்! - ANNAMALAIYAR TEMPLE - ANNAMALAIYAR TEMPLE
🎬 Watch Now: Feature Video
Published : Jul 4, 2024, 7:43 AM IST
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆனி மாத பிரதோஷம் நேற்று மாலை வெகு விமர்சையாக நடைபெற்றது. பொளர்ணமி மற்றும் அமாவாசை வரும் இரண்டு தினங்களுக்கு முன்பு மகா நந்திக்கு பிரேதோஷம் நடைபெறுவது வழக்கம்.
ஆனி மாத பிரதோஷ தினமான நேற்று அண்ணாமலையார் கோயிலில் உள்ள பெரிய நந்திக்கு அரிசி மாவு, மஞ்சள் தூள், அபிஷேகத்தூள், பஞ்சாமிர்தம், தயிர், தேன், பன்னீர் உள்ளிட்ட பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து நந்தி பகவானுக்கு அருகம்புல், வில்வ இலை, சாமந்திப்பூ, மல்லி, கனகாம்பரம் ஆகிய வண்ண மலர்களால் மாலை அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பஞ்சமுக தீபாராதனையும் நடைபெற்றது.
பிரதோஷ தினத்தின் போது நந்தி பகவானை வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும் என்பதும், குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பதும் பக்தர்கள் நம்பிகையாக உள்ளது. நேற்று நடைபெற்ற ஆனி மாத பிரதோஷத்தை ஏராளமான பக்தர்கள் நேரில் கண்டு அண்ணாமலையாருக்கு அரோகரா கோஷம் எழுப்பி, சாமி தரிசனம் செய்தனர்.