பயிற்சிகளை முடித்து வீரநடை போட்டு தேசத்தைக் காக்க புறப்பட்ட வீரர்களின் கண்கவர் அணிவகுப்பு! - Defense Force Training Sivagangai - DEFENSE FORCE TRAINING SIVAGANGAI
🎬 Watch Now: Feature Video
Published : Aug 30, 2024, 3:45 PM IST
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், சிவகங்கை வட்டாரத்தை அடுத்துள்ள இலுப்பகுடி கிராமத்தில் இந்தோ திபெத்திய எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மையமானது, கடந்த 2011ஆம் ஆண்டு முதல் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதில் தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு உடல் பயிற்சி, ஆயுதங்கள் கையாளுதல், களப் பயிற்சி, துப்பாக்கி சுடும் பயிற்சி என பல்வேறு பயிற்சிகள் 44 வார காலத்திற்கு அளிக்கப்பட்டு, அவர்கள் இந்திய எல்லைப் பகுதியில் பணிக்கு அனுப்பப்படுகின்றனர்.
இந்நிலையில், இன்று இந்த மையத்தில் 488 பேட்ச் பயிற்சி வீரர்கள் 44 வார கால பயிற்சி முடித்து, 1,084 வீரர்கள் பணிக்கு திரும்பும் அனிவகுப்பு நிகழ்ச்சியானது நடைபெற்றது. இதில் பயிற்சி முடித்த வீரர்கள் தேசியக் கொடியை ஏந்தி வீர நடை போட்டு நடந்து சென்றனர். மேலும், இந்த நிகழ்ச்சியில் பயிற்சி மையத்தின் ஐஜி நிர்பய் சிங் கலந்து கொண்டதுடன், பயிற்சியின் போது சிறந்து விளங்கிய வீரர்களுக்கு பதக்கங்களும் வழங்கினார். பின்னர், வீரர்களின் சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.