தூத்துக்குடி: ரூ.17 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களைத் துவங்கி வைக்கும் பிரதமர் மோடி! - குலசேகரபட்டினம்
🎬 Watch Now: Feature Video
Published : Feb 28, 2024, 9:53 AM IST
|Updated : Feb 28, 2024, 11:10 AM IST
தூத்துக்குடி: பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ளார். நேற்று திருப்பூர் பல்லடத்தில் நடைபெற்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மேற்கொண்ட என் மண் என் மக்கள் பயணத்தின் நிறைவு விழாவில் பங்கேற்ற அவர், இன்று பல திட்டங்களையும் துவங்கி வைக்கிறார். அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் அமைந்துள்ள இஸ்ரோ நிறுவனத்தின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளத்திற்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார்.மதுரையில் இருந்து ஹெலிகாப்டரில் தூத்துக்குடி வஉசி துறைமுகத்திற்கு வரும் பிரதமர் மோடி அங்கு, வெளி துறைமுகம், கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம், பசுமை ஹைட்ரஜன் நிரப்பும் மையம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர், குலசேகரன்பட்டினத்தில் இஸ்ரோவின் ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். ஒட்டுமொத்தமாகத் தூத்துக்குடியில் நடைபெறும் நிகழ்வில் பிரதமர் ரூ.17 ஆயிரத்து 300 கோடி மதிப்பிலான திட்டங்களைத் துவங்கியும், அடிக்கல் நாட்டியும் வைக்கிறார்.மேலும், குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்திற்குப் பிரதமர் அடிக்கல் நாட்டிய பின்னர் அங்கிருந்து ரோகிணி (Rohini sounding rocket) விண்ணில் ஏவப்பட உள்ளது. இதனால் மணப்பாடு முதல் பெரியதாழை வரையிலான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி எச்சரித்துள்ளார்.
Last Updated : Feb 28, 2024, 11:10 AM IST