கருணைக் கொலை செய்ய வற்புறுத்திய இளைஞர்.. சப்-இன்ஸ்பெக்டர் செய்த அசத்தலான காரியம்! - Sivagangai Youth - SIVAGANGAI YOUTH
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/17-05-2024/640-480-21493404-thumbnail-16x9-chennai.jpg)
![ETV Bharat Tamil Nadu Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/tamilnadu-1716535724.jpeg)
Published : May 17, 2024, 7:40 PM IST
சிவகங்கை: தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் சுரேஷ் என்ற இளைஞர், தன்னை கருணைக் கொலை செய்யும்படி வற்புறுத்திய நிலையில் சாலையில் சுற்றித் திரிந்துள்ளார். இந்நிலையில், அவரை பத்திரமாக மீட்ட சாலைக்கிராமம் சப்-இன்ஸ்பெக்டர் பிரேம் குமார், சிவகங்கை அரசு மருத்துவமனையில் மன நோயாளிகள் பிரிவில் அனுமதித்த மனிதாபிமானமிக்க செயல் அனைவரிடத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளையான்குடியை அடுத்துள்ள சாலைகிராமம் வடக்குவலசையைச் சேர்ந்தவர் ராமு மகன் சுரேஷ். இவரது தந்தை ஓட்டுநராக பணிபுரிந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் சுரேஷ்-க்கு மன அழுத்தம் காரணமாக மனநிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று, மருத்துவமனை ஊழியர்களிடம் தனக்கு மருந்து கொடுத்து தன்னை கொன்று விடுமாறு தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சாலைகிராம காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணிபுரியும் பிரேம் குமார் இது குறித்த தகவல் அறிந்த நிலையில், அவரை தன்னுடைய சொந்த முயற்சியால் மீட்டு, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மனநலப் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியினர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.