LIVE: மக்களவையில் பிரதமர் மோடி உரை! ராகுல் கேள்விகளுக்கு பதில்? - PM Modi Speech in Parliament - PM MODI SPEECH IN PARLIAMENT
🎬 Watch Now: Feature Video
Published : Jul 2, 2024, 4:11 PM IST
|Updated : Jul 2, 2024, 6:31 PM IST
டெல்லி: குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். 18வது மக்களவை கூட்டத் தொடர் கடந்த ஜூன் 24ஆம் தேதி கூடிய நிலையில், கடந்த 27ஆம் தேதி நாடாளுமன்றத்தின் இரு அவையின் கூட்டு கூட்டத் தொடரில் கலந்து கொண்டு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார். தொடர்ந்து நேற்று (ஜூலை.1) நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது இந்து, நீட் தேர்வு, முதலமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்பினார். இந்நிலையில், ராகுல் காந்தியின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் பிரதமர் மோடி இன்று மக்களவையில் உரை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து நாளை (ஜூலை.3) புதன்கிழமை மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளதாக மத்திய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் கிரண் ரிஜுஜூ தெரிவித்துள்ளார்.
Last Updated : Jul 2, 2024, 6:31 PM IST