கட்டுப்பாட்டை இழந்த வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: திக் திக் வீடியோ காட்சி! - van accident at Kotagiri road - VAN ACCIDENT AT KOTAGIRI ROAD
🎬 Watch Now: Feature Video
Published : May 20, 2024, 4:11 PM IST
நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் - கோத்தகிரி சாலை பெட்டட்டி சுங்கம் பகுதியில், பிக்கப் வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, பின் நோக்கி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து நேர்ந்தது.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், ஆட்களை ஏற்றிக் கொண்டு பிக்கப் வாகனம் ஒன்று நேற்று (மே 19) குன்னூர் - கோத்தகிரி சாலை பெட்டட்டி சுங்கம் பகுதியில் சென்றுள்ளது. அப்போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பிரேக் பிடிக்காமல் பின்னோக்கிச் சென்று அருகே இருந்த பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.
அதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர், உடனடியாக ஓடிச் சென்று விபத்தில் சிக்கிய நபர்களை மீட்டுள்ளனர். மேலும், வாகனத்தில் பயணித்த பெண்கள், குழந்தைகள் உட்பட 11 பேரை சிகிச்சைக்காக குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நல்வாய்ப்பாக வாகனத்தில் பயணித்த 21 பேரும் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர். சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் வாகனத்தில் பயணித்த அனைவரும் ஆந்திராவில் இருந்து உதகைக்கு சுற்றுலா வந்ததாக தெரிய வந்துள்ளது.