வேலூரில் மழை நீருடன் கலந்து வெளியேறும் கழிவு நீர்.. பொதுமக்கள் கடும் அவதி! - Drainage water Leaking issue - DRAINAGE WATER LEAKING ISSUE
🎬 Watch Now: Feature Video
Published : Aug 12, 2024, 4:09 PM IST
வேலூர்: கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டில் அவ்வப்போது கன மழை பெய்து வருகிறது. அந்த வகையில் வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியிலும் கன மழை பெய்தது. அதனால், வேலூர் மாநகரம் முழுவதும் மழை நீருடன் கழிவு நீரும் கலந்து தேங்கியுள்ளதால், பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல கூட தயங்குகின்றனர். பல்வேறு பகுதிகளில் மழை செல்ல வழியில்லாததால், சாலையில் ஆங்காங்கே தேங்கி காணப்படுகிறது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், கனரக வாகனங்கள் மழை நீரில் சிக்கி சாலையிலேயே நின்றதால், பேருந்து, பைக் உள்ளிட்ட மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். குறிப்பாக, காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் முதல் பழைய காட்பாடி வரை அதிகளவு தண்ணீர் தேங்கியுள்ளதால், வேலைக்குச் செல்லும் நபர்கள், பள்ளி கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதுமட்டுமின்றி, காட்பாடி நீதிமன்ற வளாகம், வட்டாட்சியர் அலுவலகம் ஆகிய அரசு இடங்களிலும் கூட மழைநீர் வெளியேற முடியாமல் தேங்கியுள்ளது. ஏனென்றால், இந்த பகுதிகளில் கால்வாய்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால், மழை நீர் செல்ல வழி இல்லாமல் நகரின் பல்வேறு பகுதிகளில் அங்கேயே தேங்கியுள்ளது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.