வால்பாறை பேருந்துக்குள் குடை பிடித்த பயணிகள்.. அச்சத்தில் பொதுமக்கள் பயணம்! - UMBRELLA INSIDE GOVT BUS

🎬 Watch Now: Feature Video

thumbnail

கோயம்புத்தூர்: ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட வால்பாறையைச் சுற்றி அரசு மற்றும் தனியாருக்குச் சொந்தமான 56 எஸ்டேட்கள் உள்ளன. அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களது அன்றாட தேவைகளுக்கு அரசுப் பேருந்துகளில் வால்பாறைக்கு வருவது வழக்கம். இந்நிலையில், வால்பாறை பகுதியில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருவதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில், பணிக்குச் சென்று மாலை நேரங்களில் வீடு திரும்பும் பொதுமக்கள் அரசுப் பேருந்துகளில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அரசுப் பேருந்தின் மேற்கூரைகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் பேருந்துக்குள் மழைநீர் வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பேருந்துக்குள் குடை பிடித்துச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. 

தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கரன் பெண்களுக்கு இலவச பேருந்து வசதியை தொடக்கி வைத்து பேசும்பொழுது மலைப்பகுதிகளில் புதிய பேருந்துகள் விரைவில் இயக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், வால்பாறை பகுதிக்கு புதிய பேருந்து வசதி செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.