கோவை ஜனசதாப்தி ரயிலில் கொட்டிய மழைநீர்! ரயில் பயணிகள் அவதி - ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை தேவை - rain water leakage in train - RAIN WATER LEAKAGE IN TRAIN
🎬 Watch Now: Feature Video
Published : May 21, 2024, 9:39 AM IST
கோயம்புத்தூர்: தமிழ்நாட்டில் சமீபகாலமாக கோடை மழை பல்வேறு மாவட்டங்களில் பெய்து வருகிறது. இதன் காரணமாக, பல்வேறு இடங்களில் மழைநீர் சாலைகளில் தேங்கியதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், மயிலாடுதுறையில் இருந்து கோவை நோக்கி நேற்று மாலை ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது.
அப்போது ரயில் கரூர், ஈரோடு இடையே வந்து கொண்டிருந்த போது திடீரென கனமழை பெய்ததில் மழைநீர் ரயில் பெட்டிக்குள்(D14) ஒழுகியதால் பயணிகளும் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் அவதிக்குள்ளாகினர். மேலும், மழைநீர் ஒழுகும் இடத்தில் டீ குடிக்கும் பேப்பர் கப்புகளை வைத்து மழைநீர் விழுகாதவாறு செய்தனர். இதனால் ரயிலில் பயணித்த குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்டோர் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இதேபோல், கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை - கோவை ஜனசதாப்தி ரயிலில் மழைநீர் ரயில் பெட்டிகளுக்குள் அருவியாக கொட்டியது. இதைத்தொடர்ந்து கோவை, மயிலாடுதுறை சதாப்தி ரயிலிலும் மழைநீர் வடிவதால் உடனடியாக ரயில்வே நிர்வாகம் இதற்கு தீர்வு காண வேண்டுமென ரயில் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.