பேருந்தை வழிமறித்த படையப்பா யானை.. பயணிகள் அச்சம்! - கொம்பன் காட்டு யானை
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/01-03-2024/640-480-20879885-thumbnail-16x9-theni.jpg)
![ETV Bharat Tamil Nadu Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/tamilnadu-1716535724.jpeg)
Published : Mar 1, 2024, 5:12 PM IST
தேனி: கேரளா மாநிலம், மூணாறு பகுதியில் படையப்பா மற்றும் கொம்பன் ஆகிய இரண்டு காட்டு யானைகள் பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளில் புகுந்தும், சாலையில் செல்லும் வாகனங்களை வழிமறித்தும் அச்சுறுத்தி வந்தன.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக படையப்பா யானையின் நடமாட்டம் வெளியில் இல்லாமல் இருந்த நிலையில், கடந்த சில நாட்களாக தேனி மாவட்ட எல்லையான கேரள மாநிலம் மூணாறு பகுதியில் படையப்பா யானை சாலைகளில் வலம் வந்து வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, நைமக்காடு எஸ்டேட் பகுதி அருகே உள்ள சாலையில் சென்ற லாரியை மறித்து நின்ற நிலையில், நேற்று இரவு மூணாறில் பயணிகளை ஏற்றி வந்த தமிழ்நாடு அரசுப் பேருந்தை வழிமறித்து, சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அச்சுறுத்தியுள்ளது.
படையப்பா யானை பேருந்து முன் வந்து நின்றதும், பேருந்தில் இருந்த பயணிகள் அச்சமடைந்து பேருந்தை பின்னால் இயக்க ஓட்டுநரிடம் கூறியுள்ளனர். சுமார் ஒரு மணி நேரமாக பேருந்தை வழிமறித்து நின்ற யானை, பின் அங்கிருந்து நகர்ந்து சென்றது. இதனை அவ்வழியே வந்த வாகன ஓட்டிகள் எடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.