விபத்தில் சிக்கிய மாணவர்! ஓடோடி வந்து உதவிய கனிமொழி எம்.பி! - நாடாளுமன்ற தேர்தல் 2024
🎬 Watch Now: Feature Video
Published : Feb 10, 2024, 9:46 PM IST
கோயம்புத்தூர்: திமுக துணை பொது செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தலைமையில் திமுக நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு ஆலோசனை கூட்டம் இன்று (பிப்.10) கோயம்புத்தூரில் நடைபெற்றது. இதில் கோவை, நீலகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட தொழில் துறையினர், கல்வியாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் நேரடியாக சந்தித்து மனுக்கள் பெற்றப்பட்டன.
இந்நிகழ்ச்சிக்கு பின்னர், கோவையில் இருந்து திருப்பூர் புறப்பட்ட கனிமொழி அவிநாசி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது இரு சக்கர வாகனத்தில் வந்த மாணவர் ஒருவர் லாரியில் மோதி விபத்தில் சிக்கிய நிலையில் மயங்கி கிடந்துள்ளார். விபத்தில் சிக்கிய மாணவரை மீட்டு, தி.மு.கவை சார்ந்த ஒருவரின் வாகனத்தில் உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கனிமொழி அனுப்பி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, மாணவரை அனுமதித்துள்ள கோவை தனியார் மருத்துவமனைக்கு சென்ற கனிமொழி உடல் நிலையை கவனித்து தெரிவிக்குமாறு மருத்துவரிடம் கூறினார். முன்னதாக, செய்தியாளர்கள் கனிமொழியிடம் கோவையை மட்டும் திமுக புறக்கணிப்பதாக எழுப்பிய கேள்விக்கு கோவைக்கான எந்த திட்டத்தையும் செய்யவில்லை என்பது ஏற்றுக்கொள்ள முடியாது என பதிலளித்தார்.