ஊட்டியில் குத்தாட்டம் போட்ட எம்எல்ஏ ஏ.பி நந்தகுமார்.. வீடியோ வைரல்! - MLA AP NANDAKUMAR DANCE VIDEO - MLA AP NANDAKUMAR DANCE VIDEO
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/27-04-2024/640-480-21330837-thumbnail-16x9-vlr.jpg)
![ETV Bharat Tamil Nadu Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/tamilnadu-1716535724.jpeg)
Published : Apr 27, 2024, 8:10 PM IST
வேலூர்: அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் ஏ.பி.நந்தகுமார். சமீபத்தில், இவர் ஊட்டியில் உள்ள குந்தா பகுதியில் இருக்கும் மலையின் மீது ஆடிய நடனம் தொடர்பான வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.
தமிழ்நாட்டில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முதல் கட்டமாக கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. அப்போது, வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட டி.எம்.கதிர் ஆனந்தை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட ஏ.பி.நந்தகுமார், கொளுத்தும் வெயிலில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இந்நிலையில், தேர்தல் முடிந்து ஒரு வாரம் ஆன நிலையில், ஓய்வெடுக்க வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் உடன் ஏ.பி.நந்தகுமார் நீலகிரிக்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது, வேலூர் திமுக மாவட்டச் செயலாளரும், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான ஏ.பி.நந்தகுமார், அங்கு உள்ள படுகர் இன மக்கள் உடன் சேர்ந்து, அவர்களின் பாரம்பரிய நடனத்தை ஆடியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகப் பரவி வருகிறது.