LIVE: விருதுநகர், தென்காசி திமுக வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை! - MK Stalin in Srivilliputhur - MK STALIN IN SRIVILLIPUTHUR
🎬 Watch Now: Feature Video
Published : Mar 27, 2024, 7:06 PM IST
|Updated : Mar 27, 2024, 7:51 PM IST
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த கிருஷ்ணன்கோவில் அருகே, இன்று விருதுநகர் மற்றும் தென்காசி மக்களவைத் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து, அவர்களுக்காக திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்து வருகிறார். அதன் நேரலைக் காட்சிகள்.. 2024 மக்களவைத் தேர்தலை தமிழ்நாட்டில் எதிர்கொள்ளும் திமுக தலைமையிலான கூட்டணியில், விருதுநகர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. விருதுநகரில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் போட்டியிடுகிறார். அதேநேரம், தென்காசி மக்களவைத் தொகுதியில் திமுக நேரடியாக களம் காண்கிறது. இதன்படி, தென்காசி திமுக வேட்பாளராக ராணி ஸ்ரீகுமார் களம் காண்கிறார். இந்த நிலையில், இந்த இரு வேட்பாளர்களுக்கும் ஆதரவாக மு.க.ஸ்டாலின் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். முன்னதாக, நேற்றைய தினம் தூத்துக்குடியில் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வேட்பாளர் கனிமொழி மற்றும் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி வேட்பாளர் நவாஸ் கனி ஆகியோருக்கு ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வாக்கு சேகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Last Updated : Mar 27, 2024, 7:51 PM IST