திமுக விழாவில் அதிமுக பேனரா? ஷாக்கான அமைச்சர் மெய்யநாதன்! - DMK and AIADMK Banner issue - DMK AND AIADMK BANNER ISSUE
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/26-07-2024/640-480-22057055-thumbnail-16x9-meyynathan.jpg)
![ETV Bharat Tamil Nadu Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/tamilnadu-1716535724.jpeg)
Published : Jul 26, 2024, 9:55 PM IST
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் ஆலங்குடி அருகே உள்ள வெண்ணாவல்குடி ஊராட்சிக்குட்பட்ட வெள்ளக்கொல்லை பகுதி வழியாக ஆலங்குடியில் இருந்து அறந்தாங்கி செல்லக்கூடிய புதிய அரசுப் பேருந்து வழித்தடத்தை தொடங்கி வைக்கும் விழா மற்றும் புதிய சாலையைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி இன்று (ஜூலை 26) நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்து கொள்ள அமைச்சர் மெய்யநாதன் நிகழ்விடத்திற்கு வந்த போது, அங்கு வைக்கப்பட்டிருந்த அதிமுகவின் பேனரைக் கண்ட அமைச்சர் மெய்யநாதன் அப்செட்டான நிலையில், திமுகவினரிடம் கடிந்து கொண்டார். இதனால் திமுகவினர் இடையே பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே, திட்டங்களை தொடங்கி வைத்து விட்டு, அமைச்சர் மெய்யநாதன் விழா மேடையில் பேசிக் கொண்டிருந்த போது, வெண்ணாவல்குடியின் அதிமுக பிரமுகர் அ. க. முத்து என்பவர் மேடையிலேயே அமைச்சரிடம், அதிமுகவினரின் செயலுக்காக வருத்தம் தெரிவித்தார். இந்த நிகழ்வு திமுகவினர் மற்றும் அதிமுகவினரிடம் பெரும் பரபரப்பான சூழலை ஏற்படுத்தியது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ் ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்