திருச்செந்தூர் முருகன் கோயிலில் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் சத்ரு சம்ஹார பூஜை! - அனிதா ராதாகிருஷ்ணன்
🎬 Watch Now: Feature Video
Published : Feb 6, 2024, 2:04 PM IST
தூத்துக்குடி: நாடாளுன்றத் தேர்தல் நெருங்கி வருவதைத் தொடர்ந்து, அரசியல் கட்சியினர் பரபரப்பாக தேர்தல் களத்தில் இறங்கியுள்ளனர். அந்த வகையில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியில் தேசிய அளவில் காங்கிரஸ், திமுக, ராஷ்டீரிய ஜனதா தளம், சமாஜ்வாதி, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
தற்போது இந்தியா கூட்டணி கட்சியினரிடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியினர் வெற்றி பெற வேண்டி, உலகப் புகழ் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரணிய சுவாமி கோயிலில் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினார். மேலும், சத்ரு சம்ஹார மூர்த்தி சன்னதியில் சத்ரு சம்ஹார பூஜை நடத்தி சிறப்பு வழிபாடு செய்தார்.
அப்போது இந்தியா கூட்டணி பெயரில் வேத மந்திரங்கள் முழங்க, சிறப்பு பூஜைகள் செய்தார். அதனைத் தொடர்ந்து, மூலவர் சன்னதியில் சிறப்பு பூஜைகள் செய்தும் வழிபாடு நடத்திய அவர், சண்முக, தட்சணாமூர்த்தி உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினார்.