மார்கதர்சி சிட் ஃபண்ட்: இன்னும் பிரம்மாண்டமாய் கெங்கேரியில் 119ஆவது கிளை!
🎬 Watch Now: Feature Video
Published : Dec 11, 2024, 11:04 AM IST
|Updated : Dec 11, 2024, 12:09 PM IST
சிட் ஃபண்ட் துறையில் நம்பகத்தன்மையுடன் முன்னணி நிறுவனமான மார்கதர்சி சிட் ஃபண்ட் திகழ்கிறது. ராமோஜி குழுமத்தின் முதன்மை நிறுவனமான ‘மார்கதர்சி’, 1962-ஆம் ஆண்டு முதல் கூட்டுறவு நிதிச் சேவைகளில் முன்னோடியாக இருந்து வருகிறது. ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் முழுவதும் கிளைகளைக் கொண்டு, வலுவான நிதி சேவை வழங்கும் நிறுவனமாக, அதன் பாரம்பரியத்தை தொடர்ந்து நிலைநிறுத்தி வருகிறது. நம்பிக்கை, வெளிப்படைத்தன்மை மற்றும் நிதி அதிகாரம் போன்றவற்றை முதன்மைப் பண்புகளாகக் கொண்டு ‘மார்கதர்சி சிட் ஃபண்ட்’ செயல்பட்டு வருகிறது. 119-ஆவது கெங்கேரி கிளை வாயிலாக, பயனர்கள் வீடுகளின் அருகே நிதி சேவைகளை அளிப்பதில் மார்கதர்சி பெருமை கொண்டுள்ளது. மேலும், இதை மற்றொரு மைல்கல்லாகவும் நிறுவனம் பதிவு செய்துள்ளது. கெங்கேரி கிளை திறப்பு குறித்து பேசிய மார்கதர்சி நிர்வாக இயக்குநர் சைலஜா கிரண், "கர்நாடகா மாநிலம் கெங்கேரியில் திறக்கப்படவுள்ள புதிய கிளை எங்கள் நோக்கத்தில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும். மார்கதர்சி சிட் ஃபண்ட் கர்நாடக மக்களுக்கு நெருக்கமானது. இது எங்கள் சந்தாதாரர்கள் தங்கள் இலக்குகளை அடைய உதவும் வகையில் பாதுகாப்பான, வெளிப்படையான மற்றும் ஒழுக்கமான சேமிப்பு விருப்பங்களை வழங்க உறுதி பூண்டுள்ளது. எங்கள் சந்தாதாரர்கள் எங்களிடமிருந்து எதிர்பார்க்கும் சிறப்பான சேவையைத் தொடர நாங்கள் தொடர்ந்து உழைத்து வருகிறோம்," எனத் தெரிவித்துள்ளார்.
Last Updated : Dec 11, 2024, 12:09 PM IST