“கஞ்சா கடத்துறவன விட்டுறீங்க.. என்னை மட்டும் ஏன் பிடிக்கிறீங்க? - போலீஸ் - மளிகை வியாபாரி இடையே வாக்குவாதம்! - Thanjavur Police argument video - THANJAVUR POLICE ARGUMENT VIDEO
🎬 Watch Now: Feature Video
Published : Aug 25, 2024, 4:29 PM IST
தஞ்சாவூர்: ஹெல்மெட் அணியாமல் வந்த வியாபாரியின் இருசக்கர வாகனத்திலிருந்து சாவியை எடுத்த போலீசார் அரை மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்க வைத்ததால், வியாபாரி போலீசாரிடம் வாக்குவாதம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இது குறித்து வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தஞ்சை தொம்பன்குடிசை பகுதியில் நேற்று வழக்கம்போல் போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, ஹெல்மெட் அணியாமல் மளிகைப் பொருட்கள் வாங்கிக்கொண்டு வந்த வியாபாரியை தடுத்து நிறுத்திய போலீசார், அவரது வாகனத்திலிருந்து சாவியை எடுத்து வைத்துள்ளனர். தொடர்ந்து, அரை மணி நேரத்திற்கும் மேலாக சாவியை தராமல் வியாபாரியை காத்திருக்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த வியாபாரி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனைக் கண்ட பொதுமக்கள் வியாபாரிக்கு ஆதரவாக போலீசிடம் விவாதம் செய்துள்ளனர். மேலும், “திருடன், கஞ்சா கடத்தல் செய்பவர், கொள்ளைக்காரன், தீவிரவாதி இவர்களையெல்லாம் விட்டுறீங்க, என்னைப் போன்ற வியாபாரியிடம் சாவியை பிடிங்கி வச்சிக்கிறறீங்க” என வாக்குவாதம் செய்தார். இது குறித்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.