தேசிய அளவிலான மூத்தோர் தடகள போட்டி: ஆசிய போட்டிக்கு தகுதிப் பெற்ற கும்பகோணம் தடகள வீரர் - ஆசிய போட்டி
🎬 Watch Now: Feature Video
Published : Feb 27, 2024, 9:16 AM IST
தஞ்சாவூர்: மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் கடந்த வாரம் 44வது மூத்தோர் தேசிய அளவிலான தடகளப் போட்டி சத்ரபதி சிவாஜி மைதானத்தில் நேற்று (பிப்.26) நடைபெற்றது. இதில், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் டெல்லி வீரர் முதல் இடத்தையும், தமிழக மாநிலம் கும்பகோணத்தைச் சேர்ந்த வீரர் ராமமூர்த்தி இரண்டாவது இடத்தையும், பஞ்சாப் வீரர் மூன்றாம் இடத்தையும் பெற்று பதக்கங்களை வென்றனர்.
தேசிய அளவில் நடந்த தடகளப் போட்டியில், வெற்றி பெற்றதன் மூலம் ஆசிய அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்ற கும்பகோணம் வீரர் ராமமூர்த்திக்கு பாணாதுறை பகுதியில் உள்ள விளையாட்டு வீரர்கள், தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பளித்தனர். இந்த நிகழ்ச்சியினைக் கண்ட வெளிநாட்டிலிருந்து சுற்றுலா வந்த சைமன் - மேகி தம்பதியினர் ராமமூர்த்தியைப் பாராட்டினார்.
இந்த நிகழ்ச்சி தியாகராஜன் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில், தஞ்சை மாவட்ட தடகள சங்க செயலாளர் செந்தில், டாக்டர் நெடுஞ்செழியன், ஐயப்பா சேவா சங்க மாவட்ட செயலாளர் நவநீதகிருஷ்ணன், கால்பந்து வீரர் சுவாமிநாதன், தடகள வீரர் ரமேஷ் குமார், சமூக சேவகர்கள் சிவசுப்ரமணியன், அயூப்கான், ரோட்டரி சங்க தலைவர் வெங்கடேசன் உள்ளிட்டோர் சிறப்புரை ஆற்றினர். மணிமுத்து வரவேற்புரை ஆற்ற, ராஜேஷ் நன்றி கூறினார்.