நீச்சல் குளத்தில் குளித்து மகிழ்ந்த மங்களம் யானை.. கியூட் வீடியோ வைரல்! - temple elephant bathing video - TEMPLE ELEPHANT BATHING VIDEO
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/21-03-2024/640-480-21042825-thumbnail-16x9-kum.jpg)
![ETV Bharat Tamil Nadu Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/tamilnadu-1716535724.jpeg)
Published : Mar 21, 2024, 11:03 PM IST
தஞ்சாவூர்: கும்பகோணம் மாநகரில், ஆதிகும்பேஸ்வரர் கோயில் பழமையும், பெருமையும் வாய்ந்த சைவத் திருத்தலங்களில் ஒன்றாகும். மகாமகப் பெருவிழா நடைபெறும் பன்னிரண்டு முக்கிய சைவ திருத்தலங்களில் இது முதன்மையான தலமாக விளங்குகிறது.
கோயிலுக்கு 1980ஆம் ஆண்டு, மறைந்த காஞ்சி மகா பெரியவர், ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், 14 வயது பெண் யானையை மங்களம் என பெயரிட்டு வழங்கினார். அப்போதில் இருந்து இந்த யானை கடந்த 44 ஆண்டுகளாக இக்கோயிலில் உள்ளது.
இந்நிலையில், தற்போது கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மங்களம் யானை இன்று மதியம் நீச்சல் குளத்தில் குளிக்க யானை பாகன் அசோக்குடன் உற்சாக நடை போட்டபடி வந்தது. அதற்கான பிரத்யேக நீச்சல் குளத்தில் ஆர்வமாக இறங்கியது.
பின்னர், தன் மேலே ஆசை ஆசையாக தும்பிக்கை வழியாக தண்ணீரை நிரப்பி, தன் மீது ஊற்றிக் கொண்டு, தண்ணீரை கண்ட சிறு குழந்தையைப் போல் துளி குதித்து விளையாடியும், சுற்றி நின்று வேடிக்கை பார்த்த பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மீது தண்ணீரை இறைத்தும் உற்சாகமாக சுமார் ஒரு மணி நேரம் ஆனந்த குளியல் இட்டு விளையாடியது. இதனை கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்த்து மகிழ்ந்தனர்.