விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிள்ளையார்பட்டியில் தீர்த்தவாரி! - Pilliyarpatti Ganesha Chaturthi
🎬 Watch Now: Feature Video
Published : Sep 7, 2024, 8:05 PM IST
சிவகங்கை: இந்தியா முழுவதும் விநாயக சதுர்த்தி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விநாயக சதுர்த்தி என்பது இந்துக்களின் முக்கியமான விழாக்களுள் ஒன்று. இந்நிலையில் இந்த இவ்விழாவானது ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாளன்று கொண்டாடப்படுகிறது. அதில் தமிழகத்தில் பல்வேறு இடங்கள் பல்வேறு தோற்றத்தில் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு சிறப்பு தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பின்பு தீர்த்தவாரி நிகழ்ச்சிக்காக உற்சவமூர்த்தி கோவிலில் இருந்து பல்லக்கில் கொண்டு வரப்பட்டு தலைமை குருக்கள் பிச்சை குருக்களின் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில் வளாகத்தில் உள்ள குளத்தில் அங்குசதேவர், அஸ்திதேவர் சிலை 3 தடவை முக்கி எடுக்கப்பட்டு அதில் உள்ள நீர் பக்தர்களின் மீது தெளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை சிறப்பு தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.