மணமக்களுக்கு துடைப்பம் பேக்கேஜாக பரிசு.. அரியலூரில் கலகலப்பு! - friends marriage goals - FRIENDS MARRIAGE GOALS
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/19-05-2024/640-480-21507002-thumbnail-16x9-alr.jpg)
![ETV Bharat Tamil Nadu Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/tamilnadu-1716535724.jpeg)
Published : May 19, 2024, 6:47 PM IST
அரியலூர்: அரியலூர் மாவட்டம், இலைகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த விஜய் என்பவருக்கும், அதே மாவட்டத்தைச் சேர்ந்த சென்னிவனம் என்ற கிராமத்தைச் சேர்ந்த மாரியம்மாள் என்பவருக்கும், இன்று இலைகடம்பூர் சிவன் கோயிலில் திருமணம் நடைபெற்றுள்ளது.
இதில் மணமக்களின் நண்பர்களும், உறவினர்களும் திருமண தம்பதி பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என வாழ்த்தி குடம், துடைப்பம், குப்பை வார்தல் உள்ளிட்ட வித்தியாசமான பரிசுப் பொருட்களை கொடுத்து அசத்தியுள்ள வீடியோ இணையத்தில் வைரலானது.
வழக்கம் போல திருமண தம்பதிகளுக்கு தரும் சுவர் கடிகாரம், கப் அண்ட் சாஸர் பரிசுகள் புதிய வடிவம் பெற்று ட்ரெண்டிங் பரிசுகளாக மாறியுள்ளது. இதில் வீட்டிற்கு அன்றாடம் தேவைப்படும் பொருட்களை பரிசாக வாங்கி திருமண தம்பதிக்கு அன்பளிப்பதும் ஒரு வகையான பரிசாக தருகின்றனர்.
சமீபத்தில் காய்கறி, மளிகை பொருட்கள் வாங்கி அன்பளிப்பதை நாம் இணையத்தில வைரலான வீடியோக்களில் பார்த்திருப்போம். அதேபோல், திருமணமானவர்களுக்கு குழந்தை பிறக்கும் முன்பே குழந்தைக்குத் தேவையான டயபர், பால் பாட்டில்களையும் பரிசளிப்பதை பார்க்க முடிகிறது. இந்த நிலையில்தான் துடைப்பம் பரிசாக வழங்கப்பட்டிருக்கின்றது.