தேனியில் பைக்கினுள் பதுங்கி இருந்த 4 அடி நீளமுள்ள கொம்பேறிமூக்கன் வகை பாம்பு! - four feet snake lurking in the two wheeler - FOUR FEET SNAKE LURKING IN THE TWO WHEELER
🎬 Watch Now: Feature Video
Published : Jun 10, 2024, 10:59 PM IST
தேனி: தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் பேருந்து நிலையம், தேவர் சிலை அருகில் தையல் கடை ஒன்று உள்ளது. அதன் உரிமையாளர் அனிபா தனது இருசக்கர வாகனத்தைக் கடை முன்பு நிறுத்தி வைத்துள்ளார். அப்போது, அவர் கடையில் பணியாற்றிக் கொண்டிருந்த பொழுது கடையிலிருந்து சுமார் நான்கு அடி நீளம் உள்ள கொம்பேறி மூக்கன் வகை பாம்பு வெளியே வந்துள்ளது.
கடையிலிருந்து வெளியேறிய பாம்பு, அங்கிருந்த அவரது இருசக்கர வாகனத்திற்குள் சென்று பதுங்கிக் கொண்டது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அனிபா உடனடியாக போடிநாயக்கனூர் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார்.
இத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் பாம்பைப் பிடிக்கத் தீவிர முயற்சி மேற்கொண்டனர். இந்நிலையில், சற்றும் எதிர்பார்க்காமல் சீறிப்பாய்ந்த பாம்பு அருகிலிருந்த மற்றொரு இருசக்கர வாகனத்திற்குள் பதுங்க முயற்சித்தது. ஆனால், தீயணைப்புத் துறையினர் உரிய உபகரணங்கள் மூலம், பாம்பை லாவகமாக உயிருடன் பிடித்து வனப்பகுதிக்குள் விட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.