வைகாசி அமாவாசை; நவதானிய அலங்காரத்தில் தஞ்சை விஷ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேயர்! - Thanjai VISWARUPA JAYAMARUTHI HANUMAN - THANJAI VISWARUPA JAYAMARUTHI HANUMAN

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 7, 2024, 9:43 PM IST

தஞ்சாவூர்: கும்பகோணம் பாலக்கரை விஷ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேய சுவாமியிடம் உலக மக்கள் நலன் வேண்டியும், கடும் கோடை வெப்பம் தணிய வேண்டும் என்றும், அனைத்து ஜீவராசிகளையும் கோடை வெப்பத்தில் இருந்து காக்க வேண்டும் என சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இந்த நிலையில், இன்று வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு, நெல்மணிகள், துவரை, உளுந்து, பச்சைப்பயிறு, மொச்சை, எள், கோதுமை, கொள்ளு மற்றும் கொண்டக்கடலை ஆகிய 9 வகை பொருட்கள் அடங்கிய விசேஷ நவதானிய அலங்காரத்தில் 9 அடி உயர விஷ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேயசுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மேலும் சேவை சாதித்தார். கூட்டுப்பிராத்தனையுடன் தரிசனம் மற்றும் சகஸ்ர நாம அர்ச்சனையும் 1,001 முறை இராம நாம சொல்லப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து, சிறப்பு பூஜைகளுடன், குங்குமம் மற்றும் உதிரிப்பூக்களைக் கொண்டு அர்ச்சனை செய்த பிறகு பஞ்சார்தி செய்து, 16 விதமான சோடஷ உபசாரங்களும் செய்யப்பட்டது.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.