தேனி ஆட்சியர் அலுவலகத்தில் புகுந்த பாம்பு: கதவை உடைத்துப் பிடித்த தீயணைப்புத் துறை! - snake inside theni collector office
🎬 Watch Now: Feature Video
Published : Apr 4, 2024, 8:37 PM IST
தேனி: தேனி ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கூட்டரங்கு அருகே தேர்தல் தொடர்பான அனுமதி கடிதம் பெறும் அலுவலகம் அமைந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை அலுவலகத்தில் உள்ளே பாம்பு சத்தத்தைக் கேட்டு அலுவலர்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர் தகவல் அறிந்து ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்த தீயணைப்புத் துறையினர், பாம்பு இருப்பதைக் கண்டுபிடித்து அதனைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தீயணைப்புத் துறையினர் பாம்பைப் பிடிக்க முற்பட்ட போது பாம்பு அலுவலக கதவின் உள்ளே நுழைந்து கொண்டது. இதனால் பாம்பைப் பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. பின்னர் தீயணைப்புத் துறையினர் அலுவலக கதவினை தனியாக உடைத்து தண்ணீர் மற்றும் ரசாயனத்தை ஊற்றி பாம்பை வெளியே வரவழைத்து அரை மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னர் லாவகமாகப் பிடித்தனர்.
ஆட்சியர் அலுவலகத்தில் புகுந்த பாம்பு விஷமற்ற சாரைப்பாம்பு என்று கூறிய தீயணைப்புத் துறையினர், அதை பாதுகாப்பாகப் பையில் வைத்து எடுத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.