வாணியம்பாடி அருகே பயங்கர தீ விபத்து.. தீயில் கருகிய ரூ.50 லட்சம் மரங்கள்! - wooden godown fire incident - WOODEN GODOWN FIRE INCIDENT
🎬 Watch Now: Feature Video
Published : Mar 29, 2024, 11:00 AM IST
திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே உள்ள மர குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.50 லட்சம் மதிப்பிலான உயரக மரக்கட்டைகள் எரிந்து சேதமாகியுள்ளது.
திருப்பத்தூர் வாணியம்பாடி அடுத்த கவுகாப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவர் பத்தாபேட்டை பகுதியில் மர குடோன் வைத்துள்ளார். நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல் மர குடோனை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார். இந்நிலையில், நேற்று காலை மர குடோனில் திடீரென பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனை பார்த்த அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறையினருக்கு, குடோனின் உரிமையாளர் முருகனுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், தீயை அணிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், தீ மளமளவென பரவியதால், குடோனில் உள்ள மரக்கட்டைகள் கொளுந்து விட்டு எரிய தொடங்கியுள்ளது.
மேலும், தீயணைப்பு வாகனங்களில் இருந்த தண்ணீர் தீர்ந்ததால், இரண்டு டிராக்டர் மற்றும் அருகில் இருந்த வீட்டிலிருந்த தண்ணீரை கொண்டு தீயை அணைத்துள்ளனர். சுமார், ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில், குடோனில் வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான, தேக்கு, வேங்கை, வேப்பம், பர்மா தேக்கு, உள்ளிட்ட உயர் ரக மரக்கட்டைகள், இயந்திரங்கள் தீயில் எரிந்தது. குடோன் உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் வாணியம்பாடி கிராமிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.