குப்பைக் கிடங்கில் தீ விபத்து.. சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் புகை மூட்டம்! - fire accident in garbage dump - FIRE ACCIDENT IN GARBAGE DUMP
🎬 Watch Now: Feature Video
Published : Apr 6, 2024, 10:14 PM IST
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு பகுதியில் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையோரம் வாணியம்பாடி நகராட்சிக்குச் சொந்தமான நகராட்சிக் குப்பைக் கிடங்கு உள்ளது. இந்த நிலையில், இந்த குப்பைக் கிடங்கில் உள்ள குப்பைகள் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது.
இதனால் குப்பைக் கிடங்கில் இருந்து அதிக அளவு கரும்புகை வெளியேறியதால், சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை முழுவதும் கரும்புகை சூழ்ந்து புகை மண்டலமாகக் காட்சி அளித்தது. இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்துத் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் மூலம் குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீயைப் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், இந்த நகராட்சிக் குப்பைக் கிடங்கிற்கு மர்ம நபர்கள் யாரேனும் தீ வைத்தார்களா அல்லது வேரேதேனும் காரணமா என இந்த தீ விபத்து குறித்து வாணியம்பாடி நகரக் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.