மேகதாது அணை கட்டுவதற்கு ஆதரவான தீர்மான நகலை எரித்து தஞ்சையில் விவசாயிகள் ஆர்பாட்டம்! - Thanjavur farmers protest - THANJAVUR FARMERS PROTEST
🎬 Watch Now: Feature Video
Published : May 21, 2024, 6:18 PM IST
|Updated : May 21, 2024, 9:28 PM IST
தஞ்சாவூர்: தஞ்சாவூரின் தலைமை அஞ்சலகம் முன்பு, தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில், மேகதாது அணை கட்டுவதற்கு வெளி வந்த ஆதரவான தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.
இன்று காவிரி மேலாண்மை ஆணையத்தின் 30-வது கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடகாவிற்கு ஆதரவான வகையில் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி சட்ட விரோதமாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளதாகக் கூறி, காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி ஆர் பாண்டியன் தலைமையில், தஞ்சை தலைமை அஞ்சலகம் முன்பு ஆர்பாட்டம் நடைபெற்றது.
அப்போது, நிறைவேற்றப்பட்ட சட்ட விரோதமான தீர்மானத்தை கண்டித்தும், தீர்மானத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், மேலும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.இதில் தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் தீர்மான நகலை எரித்து போராட்டம் செய்தனர். மேலும், இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு, மத்திய மற்றும் மாநில அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.