விஜய் பிறந்த நாள்: இலவச பேருந்து பயணம்; பொதுமக்களிடம் பாராட்டுகளை அள்ளும் ரசிகர்கள்! - VIJAY FAN GIVES FREE BUS TRAVEL - VIJAY FAN GIVES FREE BUS TRAVEL

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 23, 2024, 2:09 PM IST

மதுரை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜயின் 50-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் நாடு முழுவதும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மதுரையில் உள்ள சோழவந்தான் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று ஒருநாள் மட்டும் கட்டணம் இல்லாமல் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டன. வாடிப்பட்டியில் இருக்கும் விஜய் ரசிகர் தமிழன் தாமு என்பவரது தலைமையில் இந்த சேவை வழங்கப்பட்டது. விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்கள் இந்த ஏற்பாட்டை செய்ததையடுத்து அந்த பகுதி மக்கள் பேருந்தில் மகிழ்ச்சியுடன் பயணித்தனர். 

இன்று சுமார் 500-க்கும் மேற்பட்ட பயணிகள் கட்டணம் இல்லாமல் பேருந்தில் பயணித்துள்ளனர். மேலும், பேருந்தில் பயணம் செய்த அனைவருக்கும் விஜய் ரசிகர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் இனிப்புகள் வழங்கினர். நடிகர் விஜய் அதிகாரப்பூர்வ அரசியல் பயணத்தை தொடங்கிய பின்னர் வந்துள்ள அவரது முதல் பிறந்தநாள் இது என்பதால் ரசிகர்களும், கட்சியினரும் விஜயின் பிறந்த நாளில  மக்கள் சேவையில் ஈடுப்பட்டிருப்பது பெரும் பாராட்டை பெற்றுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.