இது யானை ரெய்டு.. வாகனங்களை வழிமறித்து உணவு தேடும் காட்டு யானை! - Sathyamangalam Tiger Reserve
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/29-01-2024/640-480-20618121-thumbnail-16x9-erd.jpg)
![ETV Bharat Tamil Nadu Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/tamilnadu-1716535724.jpeg)
Published : Jan 29, 2024, 5:24 PM IST
ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் உள்ள சாலையில் காட்டு யானை ஒன்று வாகனங்களை வழிமறித்து காய்கறிகள் ஏதாவது உள்ளதா என உணவு தேடி அலையும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதி வழியாக தமிழக கர்நாடகா மாநிலங்களை இணைக்கும் அரேப்பாளையம் - கொள்ளேகால் சாலை அமைந்துள்ளது. அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள இச்சாலை வழியாக பேருந்து போக்குவரத்து மற்றும் சரக்கு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அரேப்பாளையத்தில் இருந்து கொள்ளேகால் செல்லும் சாலையில் கேர்மாளம் அருகே வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஆண் காட்டு யானை சாலை நடுவே நடமாடியதால் யானையை கண்ட வாகன ஓட்டுநர்கள் வாகனங்களை சாலையில் நிறுத்தினர். வாகனங்களை வழிமறித்த காட்டு யானை சரக்கு வாகனங்களில் காய்கறிகள் ஏதாவது உள்ளதா என தனது தும்பிக்கையால் ஒவ்வொரு வாகனமாக சோதனையிட்டபடி உணவு தேடி அலைந்தது.
வாகனங்கள் மற்றும் மனிதர்களுக்கு இடையூறு கொடுக்காமல் உணவு தேடி அலைந்த காட்டு யானையின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.