வைத்தீஸ்வரன் கோயிலில் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம்! - எடப்பாடி பழனிசாமி தரிசனம்
🎬 Watch Now: Feature Video
Published : Feb 18, 2024, 2:30 PM IST
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோயிலில் (Vaitheeswaran Koil) தேவாரப்பாடல் பெற்ற, ஸ்ரீ தையல்நாயகி உடனாகிய ஸ்ரீ வைத்தியநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது. நவக்கிரக ஸ்தலங்களில் முதன்மையான செவ்வாய் ஸ்தலமாக விளங்கும் இக்கோயிலில் முருகப்பெருமான், வள்ளி தெய்வானையுடன் செல்வ முத்துக்குமார சுவாமியாக தனி சன்னிதியில் அருள்பாலிக்கிறார்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து வழிபாடு செய்து வருகின்றனர். மேலும், திரைப்படப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வந்து செல்கின்றனர். இந்நிலையில், இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வைத்தீஸ்வரன் கோயிலுக்கு வருகை புரிந்து சாமி தரிசனம் செய்தார்.
அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் கோயிலின் ஒவ்வொரு சாமி சன்னதிகளிலும் வழிபாடு செய்தனர். அவருடன், அதிமுக அமைப்புச் செயலாளர் ஓ.எஸ்.மணியன், அதிமுக மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் பவுன்ராஜ், மாவட்ட அவைத்தலைவர் பி.வி.பாரதி, முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், முன்னாள் எம்.எல்ஏக்கள் ராதாகிருஷ்ணன், ராமராமநாதன், சக்தி, முருகுமாறன், கொள்ளிடம் ஒன்றியச் செயலாளர் கே.எம்.நற்குணன், தொழிலதிபர் மார்க்கோனி உள்ளிட்ட கட்சியினர் உடனிருந்தனர்.