Live: தூத்துக்குடியில் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார் எடப்பாடி பழனிசாமி! - Thoothukudi Edappadi Palaniswami
🎬 Watch Now: Feature Video
Published : Mar 26, 2024, 5:58 PM IST
|Updated : Mar 26, 2024, 6:46 PM IST
தூத்துக்குடி: அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, தனது முதல் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தைத் திருச்சியில் தொடங்கினார். அந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக தலையிலான கூட்டணியில் உள்ள 40 வேட்பாளர்களையும், ஒரே மேடையில் ஆதரித்து ஈபிஎஸ் பிரச்சாரம் செய்தார்.தற்போது அதன் தொடர்ச்சியாகத் தூத்துக்குடியில் அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணியை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தற்போது பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.இதற்காக இன்று (மார்ச்.26) மதியம் விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சிறிது நேரம் ஓய்வுக்குப் பின் தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே உள்ள மைதானத்தில் அதிமுக சார்பில் ஏற்பாடு செய்துள்ள தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு வந்தடைந்தார். தூத்துக்குடியில் பிரச்சாரத்தை முடித்து விட்டுத் தொடர்ந்து நெல்லை புறப்பட்டுச் செல்கிறார். தூத்துக்குடியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று ஒரே நாளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்கள் என்பதால் தேர்தல் பரபரப்பு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
Last Updated : Mar 26, 2024, 6:46 PM IST