“ஓடுற பஸ்ச ஒரே காலால எப்டி நிறுத்துனேன் பாத்தியா..” மதுப்பிரியருக்கு எலும்பு முறிவு.. மயிலாடுதுறையில் நடந்தது என்ன? - DRUNKEN MAN Atrocity - DRUNKEN MAN ATROCITY
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/09-06-2024/640-480-21670532-thumbnail-16x9-fdf.jpg)
![ETV Bharat Tamil Nadu Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/tamilnadu-1716535724.jpeg)
Published : Jun 9, 2024, 12:45 PM IST
|Updated : Jun 12, 2024, 10:51 PM IST
மயிலாடுதுறை: மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில் கலைஞர் நகர் என்ற இடத்தில் கோயில் திருவிழாவுக்கு மைக் செட் கட்டப்பட்டுள்ளது. இதில் ஒளிபரப்பப்பட்ட பக்திப் பாடலுக்கு நேற்றைய முன்தினம் (ஜூன் 7) அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சாமி வந்தது போல் நடுரோட்டில் ஆடி, வாகன ஓட்டிகளை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கினார்.
சுமார் 15 நிமிடங்களுக்கு மேலாக அவர் சாலையில் நின்றவாறு கடந்து சென்ற வாகனங்களை நிறுத்தி, வாகனங்களை கையால் தாக்கியும், காரின் மீது காலை தூக்கி வைத்தும் அட்ராசிட்டியில் ஈடுபட்டுள்ளார். பின்னர், அந்த வழியாக வந்த அரசுப் பேருந்தை வழிமறித்த இளைஞர், சுமார் 5 நிமிடங்கள் அந்தப் பேருந்தை கடந்து செல்ல முடியாதவாறு தடுத்து நிறுத்தியதுடன், பேருந்தின் கண்ணாடியை கையால் தாக்கியும், பேருந்தை எட்டி உதைத்தும் அடாவடியில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது, போதை தலைக்கேறிய இளைஞர் வலது காலால் உதைத்ததில் அவர் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு, சாலையிலேயே நிலை தடுமாறி விழுந்துள்ளார். தற்போது இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.