தண்ணீர் கேனில் சிக்கிய தலையுடன் தவித்த தெருநாய்.. பாதுகாப்பாக மீட்ட வனவிலங்கு ஆர்வலர்! - Dog rescue video - DOG RESCUE VIDEO
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/17-08-2024/640-480-22231205-thumbnail-16x9-chee.jpg)
![ETV Bharat Tamil Nadu Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/tamilnadu-1716535724.jpeg)
Published : Aug 17, 2024, 7:52 PM IST
கடலூர்: தட்சணமூர்த்தி நகர் பகுதியில் சுற்றித்திரிந்த தெரு நாய் ஒன்று, அப்பகுதியில் இருந்த ஒரு வீட்டில் தண்ணீர் கேனில் தண்ணீர் குடிக்க முயற்சித்த பொழுது, எதிர்பாராத விதமாக கேனுக்குள் தலை சிக்கியது. இதனால், செய்வதறியாமல் அங்கும் இங்கும் ஓடி சாலை ஓரம் உள்ள கழிவு நீர் கால்வாயில் விழுந்து நாய் தடுமாறிக் கொண்டிருந்துள்ளது.
இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள், இச்சம்பவம் பற்றி வனவிலங்கு ஆர்வலரும், பாம்புபிடி வீரருமான செல்லா என்பவருக்கு அப்பகுதியினர் தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து வந்த செல்லா மற்றும் அவரது குழுவினர், கேனில் மாட்டிக் கொண்ட நாயின் தலையை நீண்ட நேர போராட்டத்திற்குப் பின் வெளியே எடுத்தனர்.
வெயிலின் தாக்கத்தைப் போக்க தண்ணீர் குடிக்க நாய் தண்ணீர் கேனில் தலையை விட்டு மாட்டிக்கொண்டு சாலையில் ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், சரியான நேரத்தில் விரைந்து வந்து மனிதநேயத்துடன் செயல்பட்டு கேனில் சிக்கிய நாயின் தலையை மீட்ட செல்லாவுக்கு அப்பகுதியினர் பாராட்டுக்களை தெரிவித்தனர்.