கோவையில் மலைவாழ் மக்களுடன் பாரம்பரிய நடனமாடி வாக்கு சேகரித்த திமுகவினர்! - DMK election campaign in coimbatore - DMK ELECTION CAMPAIGN IN COIMBATORE
🎬 Watch Now: Feature Video
Published : Mar 30, 2024, 4:45 PM IST
கோயம்புத்தூர்: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பிரச்சார பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசி வருகிறார். கோவையில் நேற்று, திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து, கனிமொழி மற்றும் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா ஆகியோர் பிரசாரத்தை மேற்கொண்டனர்.
இந்நிலையில், கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள பாலமலை கிராமத்தில், இன்று திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்கு ஆதரவாக, திமுகவினர் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.
அப்பொழுது, திமுக மாநில மாணவரணித் தலைவரும், கவுண்டம்பாளையம் பொறுப்பாளருமான ராஜீவ் காந்தி, மாவட்ட துணைச் செயலாளர் அசோக் ஆறுக்குட்டி ஆகியோர் மலைவாழ் மக்களுடன் சேர்ந்து அவர்களின் பாரம்பரிய நடனம் ஆடியும், மேளதாளம் இசைத்தும் உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்து துண்டுப் பிரசுரங்கள் வழங்கினர்.