LIVE: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுக முப்பெரும் விழா நேரலை! - Covai DMK Festival - COVAI DMK FESTIVAL
🎬 Watch Now: Feature Video
Published : Jun 15, 2024, 6:59 PM IST
|Updated : Jun 15, 2024, 9:22 PM IST
கோயம்புத்தூர்: சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இதை கொண்டாடடும் வகையில், முப்பெரும் விழா நடத்த திமுகவினர் முடிவு செய்தனர். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா, 40 தொகுதிகளிலும் வெற்றி அளித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, மக்களவைத் தேர்தல் உட்பட தொடர்ந்து வெற்றிகளை பெற்று வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிக்கும் விழா என முப்பெரும் விழா கோவை கொடிசியா மைதானத்தில் இன்று (ஜூன்.15) மாலை 5 மணிக்கு நடக்கிறது.இந்நிகழ்வில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். இந்த விழாவில் திமுக கூட்டணிகளின் முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொண்டு பேசுகின்றனர். இது தவிர, 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற வேட்பாளர்கள், திமுகவின் மாநில, மாவட்ட நிர்வாகிகள், இளைஞர் அணி உள்ளிட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என பல ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.இதை முன்னிட்டு விழாவில் பங்கேற்பதற்காக, கோவை வந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவரை அமைச்சர்கள் எ.வ.வேலு, முத்துசாமி, டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் திரண்டு வரவேற்றனர். விமான நிலையத்தில் இருந்து பிரத்யேக வேன் மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் புறப்பட்டு, அருகிலுள்ள தனியார் தங்கும் விடுதிக்குச் சென்று ஓய்வு எடுத்தார். தொடர்ந்து மாலை நடைபெறும் முப்பெரும் விழாவில் கலந்து கொண்டு பேசுகிறார்.முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் முக்கிய தலைவர்கள் வருகையை முன்னிட்டு கோவை பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது. போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சட்டம் - ஒழங்கு கூடுதல் டிஜிபி அருண் மேற்பார்வையில், மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன், மேற்கு மண்டல ஐஜி பவானீஸ்வரி ஆகியோரது தலைமையில் 2 டிஐஜிக்கள், 12 காவல் கண்காணிப்பாளர்கள், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், டிஎஸ்பி-க்கள், இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள் என 3,200 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Last Updated : Jun 15, 2024, 9:22 PM IST