யாரு வாரானு பாக்குறேன்.. குடியிருப்பு பகுதி பாதையில் கூட்டமாக மிரட்டும் செந்நாய்கள்! - Dhole Problem Valparai residency - DHOLE PROBLEM VALPARAI RESIDENCY
🎬 Watch Now: Feature Video


Published : Sep 18, 2024, 4:25 PM IST
கோயம்புத்தூர்: ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதியானது உலாந்தி, பொள்ளாச்சி, மானாம்பள்ளி, வால்பாறை, அமராவதி, உடுமலை என ஆறு வனச்சரகங்கள் கொண்ட பகுதியாகும். இப்பகுதிகளில் காட்டு யானைகள், சிறுத்தை, கரு சிறுத்தை, புள்ளிமான், இருவாச்சி மற்றும் அபூர்வ பறவை இனங்கள் தாவர உண்ணிகள் என ஏராளமான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றனர்.
மேலும் இந்த பகுதியில் வால்பாறை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதி இருப்பதால், அடிகடி காட்டு யானை, புலிகள் குடியிருப்பு பகுதிக்குள் வருவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் தற்போது செந்நாய் கூட்டங்கள் அதிக அளவில் குடியிருப்பு பகுதிகளுக்குள் வருவதாக கூறுகின்றனர். அந்த குடியிருப்புக்குள் முதியவர்கள், குழந்தைகள் என பலர் உள்ளனர்.
இந்த நிலையில் இந்த செந்நாய் கூட்டங்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நடமாடுவது அப்பகுதி மக்களுக்களை பெரும் அச்சத்தில் ஆள்த்தியுள்ளது. இதனால் வனத்துறையினர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து, செந்நாய் கூட்டத்தை அடர் வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என வால்பாறை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.