காவிரியில் நீர் வரத்து குறைவு.. 23 நாட்களுக்கு பிறகு ஒகேனக்கலில் பரிசல் இயக்க அனுமதி! - Hogenakkal Cauvery river
🎬 Watch Now: Feature Video
Published : Aug 8, 2024, 11:51 AM IST
தருமபுரி: கர்நாடக மாநிலத்தில் பெய்த கனமழையின் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட உபரி நீர் காவிரி ஆற்றில் பெருகெடுத்து ஓடியது. இதனால் ஒகேனக்கல் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தருமபுரி மாவட்ட நிர்வாகம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும், குளிக்கவும் தடை விதித்தது.
இந்த நிலையில், நீர்வரத்து கடந்த நான்கு தினங்களாக படிப்படியாக குறைந்து, இன்று 8 ஆயிரம் கனஅடியாக உள்ளது. நீர்வரத்து குறைந்ததன் எதிரொலியாக ஒகேனக்கல் கோத்திகள் பாறை பகுதியில் இருந்து மணல் திட்டு வழியாக ஒகேனக்கல் மெயின் அருவியை ரசிக்கும் வகையில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து 23 நாட்களுக்கு பின் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பரிசல் சவாரி செய்து வருகின்றனர்.
மேலும், ஒகேனக்கல் மெயின் அருவி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக சேதம் அடைந்த பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால், சீரமைப்பு பணி முடிந்த பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.