Live: கோவை ஈஷா யோகா மையம் மகா சிவராத்திரி நேரலை!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 8, 2024, 6:56 PM IST

Updated : May 8, 2024, 10:54 AM IST

thumbnail
கோயம்புத்தூர்: கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலை அருகே அமைந்துள்ள ஈஷா யோக மையத்தில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை நடைபெறும் இந்த மகா சிவராத்திரி விழாவில், ஆதியோகி திவ்ய தரிசனம், தியானங்கள், அருளுரை, பிரசித்தி பெற்ற கலைஞா்களின் இசை, நடன நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், கோவையில் நடைபெறும் ஈஷா யோகா மைய மகா சிவராத்திரி நிகழ்வில் துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர், தனது மனைவி சுதேஷ் தன்கர் உடன் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். இதனால் கோவை ஈஷா யோகா மையத்தைச் சுற்றி பலகட்ட பாதுகாப்புகள் போடப்பட்டு இருக்கிறது. இது மட்டுமல்லாமல், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உள்பட பல்வேறு மாநில ஆளுநர்களும் இதில் பங்கேற்கின்றனர். மேலும், திரைப் பிரபலங்கள், விளையாட்டு நட்சத்திரங்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு மகா சிவராத்திரி நிகழ்வில் சிறப்பிக்க உள்ளனர். 
Last Updated : May 8, 2024, 10:54 AM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.