குழந்தைகளுடன் கால்பந்து விளையாடி விழிப்புணர்வு ஏற்படுத்திய எண்ணூர் போலீசார்! - police awareness on abolition drug - POLICE AWARENESS ON ABOLITION DRUG
🎬 Watch Now: Feature Video
Published : Sep 14, 2024, 10:15 PM IST
சென்னை: சென்னை ஆவடி சரகத்திற்கு உட்பட்ட எண்ணூர் காவல் நிலையம் சார்பில், ‘போதைப் பொருள்களை தவிர்ப்போம், வளமான எதிர்காலத்தை அமைப்போம்’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு ரோந்து நடைபெற்றது. இதில் எண்ணூர் உதவி ஆணையர் வீரக்குமார் தலைமையில் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் கலந்து கொண்டு, எண்ணூர் சுனாமி குடியிருப்பு பகுதியில் உள்ள சிறுவர்களிடம் கால்பந்து விளையாடியும், உடற்பயிற்சி போன்றவை மேற்கொண்டும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அதில் பேசிய எண்ணூர் உதவி ஆணையர் வீரக்குமார், “சுனாமி குடியிருப்பு பகுதியில் பெரும்பாலான குழந்தைகள் படிக்க பணம் இல்லாமல் இருக்கும் சூழல் உள்ளது. இந்த நிலை மாறுவதற்கு கல்விக்காக யார் வேண்டுமானாலும் காவல்துறையினரை அணுகலாம், முழுச் செலவினையும் ஏற்று அவர்களைப் படிக்க வைக்க தயாராக உள்ளோம்” என்றார்.
மேலும் பேசிய அவர், “சுனாமி குடியிருப்பு பகுதியில் குற்றச் சம்பவங்கள் அதிகம் நடைபெறுகிறது, சிறுவர்கள் கஞ்சா போன்ற போதைகளில் ஈடுபட்டு, அவர்களின் வாழ்வாதாரத்தை அழித்து வருகின்றன்ர். அவர்களைக் கண்டறிந்து மறுவாழ்வு அளித்து, அவர்களது தேவைகளை பூர்த்தி செய்ய காவல்துறை எப்போதும் தயாராக உள்ளது” என தெரிவித்தார்.