சென்னையில் தள்ளுவண்டியை நைசாக தள்ளிக் கொண்டு செல்லும் நபர்கள்.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்! - Roadside shop cart theft - ROADSIDE SHOP CART THEFT

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 18, 2024, 6:50 PM IST

சென்னை: தொழிலாளியின் தள்ளுவண்டியை கண்ணிமைக்கும் நேரத்தில் திருடிச்செல்லும் நபர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

வடசென்னை இராமானுஜம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் வசந்த் மற்றும் அச்சு தம்பதி. இவர்கள் மிகவும் ஏழ்மையில் வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் கடன் வாங்கி தள்ளுவண்டி ஒன்றை வாங்கியுள்ளனர்.

அந்த தள்ளு வண்டி மூலம் அதே பகுதியின் சாலையோரத்தில் இரவு நேரத்தில் உணவகம் ஒன்றை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த மே 15ஆம் தேதி நள்ளிரவில், சாலையோரம் கடை நடத்திவரும் இடத்திலேயே வியாபாரம் முடிந்த பிறகு தள்ளுவண்டியை விட்டு விட்டுச் சென்றுள்ளனர்.

சிறிது நேரத்தில் இரண்டு பேர் சேர்ந்து அந்த தள்ளுவண்டியை தள்ளிக் கொண்டு சென்றுள்ளனர். அதில், இரண்டு நபர்கள் சேர்ந்து அந்த தள்ளுவண்டியை தள்ளிச் செல்லும் காட்சி அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து தண்டையார்பேட்டை குற்றப்பிரிவு போலீசாரிடம், பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர். அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், சிசிடிவி காட்சியை ஆய்வு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.