உலக யோகா தினம்: 12 மணி நேரம் யோகா செய்து உலக சாதனை முயற்சியில் சிறுவர், சிறுமிகள்! - International yoga day
🎬 Watch Now: Feature Video
Published : Jun 21, 2024, 4:56 PM IST
தேனி: போடிநாயக்கனூர் அருகே கோடாங்கிபட்டியில் தனியார் காப்பக குழந்தைகள் 12 மணி நேரம் தொடர் யோகாசனத்தில் ஈடுபட்டு கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இன்று உலக யோகா தினத்தை முன்னிட்டு கோடாங்கிபட்டியில் உள்ள தனியார் காப்பக சிறுவர், சிறுமிகள் காலை ஆறு மணி முதல் மாலை 6 மணி வரை தொடர் யோகாசனம் செய்து சாதனை முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் 20 சிறுவர்கள் மற்றும் 20 சிறுமிகள் என மொத்தம் 40 பேர் 250 வகையான யோகாசனங்களை செய்து வருகின்றனர்.
உடலை வளைத்து பல்வேறு கடினமான ஆசனங்களை செய்துவரும் சிறுவர், சிறுமிகளின் முயற்சி அகில இந்திய உலக சாதனை அமைப்பின் சார்பில் கண்காணிக்கப்பட்டு, உலக சாதனையாக அங்கீகரிக்கபடவுள்ளது.
உலக சாதனை செய்யும் நோக்கத்தில் தொடர் யோகாசனத்தில் ஈடுபட்டு வரும் சிறுவர், சிறுமிகளை காப்பக குழந்தைகள் கைதட்டி ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தி வருகின்றனர். இன்று மாலை 6 மணிக்கு மேல் சிறுவர்களின் யோகாசனம் முயற்சி சாதனையாக அங்கீகரிக்கப்பட்டு அகில இந்திய உலக சாதனை அமைப்பின் சார்பில் பதக்கங்கள் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.