உலக அரசியல் பயிற்சிக்காக லண்டன் புறப்பட்ட அண்ணாமலை.. உற்சாகமாக வழியனுப்பி வைத்த பாஜகவினர்! - Annamalai London Visit - ANNAMALAI LONDON VISIT
🎬 Watch Now: Feature Video


Published : Aug 28, 2024, 10:24 AM IST
சென்னை: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் கல்வி பயில்வதற்காக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை லண்டன் புறப்பட்டுச் சென்றார். 3 மாதங்கள் லண்டனில் தங்கிப் படிக்கும் அவர், வரும் டிசம்பர் மாதம் இறுதியில் படிப்பை முடித்து சென்னை திரும்ப உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சென்னை விமானநிலையத்திற்கு வருகை புரிந்த அவருக்கு, பாஜக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் என பலரும் உற்சாகமாக வழியணுப்பி வைத்தனர். இதனை அடுத்து இன்று அதிகாலை சென்னை விமான நிலையத்திலிருந்து தனியார் பயணிகள் விமானத்தில் துபாய் வழியாக லண்டன் புறப்பட்டு சென்றார் அண்ணமலை.
இது குறித்து சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அண்ணாமலை, "லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிப்பதற்காக இங்கிலாந்து செல்கிறேன். நான் வெளிநாட்டிற்கு படிக்கச் சென்றாலும், என் இதயம் தமிழ்நாட்டில் தான் இருக்கும்.மேலும் ஆளுங்கட்சியின் தவறை சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிடுவேன்" என தெரிவித்தார்.
அண்ணாமலை தமிழ்நாட்டில் இல்லாத இந்த 3 மாதங்களில் காணொளி வாயிலாக அவருடன் கலந்து ஆலோசித்து கட்சியின் முக்கிய முடிவுகளை எடுப்பார்கள் என கூறப்படுகிறது.