அரசுப் பள்ளி மாணவிகளுக்கு அசைவ விருந்தளித்த.. அயப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர்! - tamilnadu public exam
🎬 Watch Now: Feature Video
Published : Feb 26, 2024, 8:56 PM IST
திருவள்ளூர்: அயப்பாக்கம் ஊராட்சியில் உள்ள அரசு மகளிர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6 முதல் 12ஆம் வகுப்புவரை பயிலும் மாணவிகளுக்கு, அயப்பாக்கம் ஊராட்சியில் மன்றத் தலைவர் துரை வீரமணி தனது சொந்த செலவில், அசைவ விருந்து கொடுத்து அசத்தியுள்ளார்.
தமிழக பாடத்திட்டத்தின்கீழ் 10,11,12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு வருகின்ற மார்ச் மாதம் முதல் பொதுத்தேர்வு தொடங்கப்படவுள்ளது. இதற்காக மாணவர்கள் அனைவரும் ஆயத்தமாகிவருகின்றனர்.மேலும் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு அரசுப் பள்ளிகளில் பொதுத் தேர்விற்குத் தயாராவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
அந்த திருவள்ளூர் மாவட்டம், அயப்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள அரசு மகளிர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அயப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் துரை வீரமணி மற்றும் கல்வியாளர்கள் கலந்து கொண்டு மாணவிகளுக்கு அச்சமின்றி தேர்வு எழுத அறிவுறுத்தினர்.
இதனையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் துரை வீரமணியின் செந்த செலவில் 50 ஆடுகள் கொண்டு தடபுடலாகச் சமைக்கப்பட்ட 1 டன் அளவிலான மட்டம் பிரியாணி, பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் மட்டுமில்லாமல் பள்ளி பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது. இதேபோல் அயப்பாக்கம் ஊராட்சியில் உள்ள ஆண்கள் பள்ளியிலும் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.