பாஜக பரப்புரை வாகனத்தில் அதிமுக கொடியா? உடனடியாக எடுக்கச் சொன்ன எல்.முருகன்! - admk flag in bjp campaign vechicle - ADMK FLAG IN BJP CAMPAIGN VECHICLE
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/31-03-2024/640-480-21114444-thumbnail-16x9-sdjk.jpg)
![ETV Bharat Tamil Nadu Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/tamilnadu-1716535724.jpeg)
Published : Mar 31, 2024, 7:58 PM IST
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பாஜக வேட்பாளர் எல்.முருகன் பரப்புரை வாகனத்தில் இருந்த அதிமுக கொடி அகற்றப்பட்டுள்ளது.
நீலகிரி நாடாளுமன்றth தொகுதியில் பாஜக சார்பில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் போட்டியிடுகிறார். திமுக சார்பில் நீலகிரி சிட்டிங் எம்.பி ஆ.ராசா மீண்டும் களம் காண்கிறார். இந்நிலையில், தேர்தலையொட்டி அனைத்து கட்சியினரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பாஜக வேட்பாளர் எல்.முருகன், உதகை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் தனது தேர்தல் பிரச்சாரத்தை துவங்கி உள்ளார்.
இந்த நிலையில், இன்று உதகை மாரியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின்பு, ஐந்து லாந்தர் பகுதியில் தனது தேர்தல் பரப்புரையை துவங்கினார். அப்போது, தனது தேர்தல் பரப்புரை வாகனத்தில். பாஜக மற்றும் கூட்டணிk கட்சிகளின் கொடிகள் பொருத்தப்பட்டு இருந்தது. அப்போது, அதில் அதிமுக கொடியும் இருந்தது. இதனைp பார்த்த எல்.முருகன் உடனே அந்த கொடியை அகற்றும்படி பாஜக நிர்வாகிகளிடம் கூறினார். பின்னர், உடனே அதிமுக கொடி பொருத்தப்பட்டிருந்த பிரச்சார வாகனத்தில் இருந்து கொடி அகற்றப்பட்டது.