ஆகம விதியை மீறி வழிபாடு? குலதெய்வ கோயில் கும்பாபிஷேகத்தில் சர்ச்சையில் சிக்கிய சரத்குமார் குடும்பம்! - வரலட்சுமி சரத்குமார்
🎬 Watch Now: Feature Video
Published : Feb 23, 2024, 8:51 AM IST
|Updated : Feb 23, 2024, 9:28 AM IST
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே சிறாவயலில் உள்ள காமாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா (பிப்.22) வெகு விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேக நிகழ்ச்சியின் போது, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள், யாகங்கள் உள்ளிட்டவை நடத்தப்பட்டன. இந்த கோயிலானது நடிகரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமாரின் குலதெய்வ கோயில் ஆகும்.
இங்கு, நடைபெற்ற கும்பாபிஷேக நிகழ்ச்சியில் நடிகர் சரத்குமார் தனது மனைவி ராதிகா, மகள் வரலட்சுமி மற்றும் உறவினர்களுடன் கலந்து கொண்டு தனது கிராம மக்களோடு பொங்கல் வைத்து சுவாமி தரிசனம் செய்தார். இந்நிலையில், கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சியின் போது, கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றும் போது சரத்குமார் மனைவி மற்றும் மகளுடன் கோயில் விமானத்தில் ஏறி தரிசனம் செய்தார்.
இதில், நடிகை ராதிகா மற்றும் வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் கோயில் விமானத்தில் ஏறி கலசம் அருகே நின்று வழிபாடு செய்தது குறித்து கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் சிலர் அதிருப்தி தெரிவித்தனர்.