கோயில் திருவிழாவில் பக்தி பரவசத்துடன் ஆடிய கோவை அதிமுக வேட்பாளர்! - LOK SABHA ELECTION 2024 COIMBATORE - LOK SABHA ELECTION 2024 COIMBATORE
🎬 Watch Now: Feature Video
Published : May 17, 2024, 1:38 PM IST
கோயம்புத்தூர்: இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளபடி 7 கட்டமாக நடைபெறும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், தற்போதுவரை 4 கட்ட வாக்குப்பதிவானது நடந்து முடிந்துள்ளது. இதில் முதற்கட்டமாக, தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்த தேர்தலில், கோவை நாடாளுமன்றத் தொகுதியை பொருத்தவறையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிட்டார். அதேபோல, அதிமுக சார்பில் அக்கட்சியின் ஐடி விங் மாநிலச் செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் களமிறக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், கோவை மாவட்டம் சிங்காநல்லூரில் உள்ள வரதராஜபுரம் பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோயிலில் நடைபெற்றுவரும் திருவிழாவில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீச்சட்டி ஏந்தியும், பால்குடம் எடுத்தும் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், திருவிழா துவங்கி முடியும் வரை ஒவ்வொரு நாளும் கம்பம் சுற்றி ஆடும் நிகழ்வும் வழக்கமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நேற்றைய தினம் (மே 16) நடைபெற்ற கம்பம் சுற்றி ஆடும் நிகழ்வில் கோவை நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் கலந்து கொண்டு தீச்சட்டி ஏந்தி கம்பம் சுற்றி பக்தி பரவசத்துடன் நடனம் ஆடினார். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது.