சீர்காழியில் தனியார் பேருந்து நடத்துநரை தாக்கும் வீடியோ வைரல்! - conductor attack in bus

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 15, 2024, 6:57 AM IST

மயிலாடுதுறை: சீர்காழியில் தனியார் ட்ரான்ஸ்போர்ட்டில் நடத்துனராக பணிபுரிபவர், வீரமணிகண்டன். இவர் நேற்றைய முன்தினம் (பிப்.13) மயிலாடுதுறையிலிருந்து சிதம்பரத்திற்கு தனியார் பேருந்தில் நடத்துனர் பணி மேற்கொண்டு சென்றுள்ளார். 

இந்நிலையில், சீர்காழி புற்றடி மாரியம்மன் கோயில் அருகே, நேற்றைய முன்தினம் இரவு 11 மணி அளவில், மர்ம நபர்கள் பேருந்தை வழி மறித்து பேருந்தில் ஏறி, பணியிலிருந்த வீரமணிகண்டனை பேருந்திலிருந்து இழுத்து கீழே தள்ளி சரமாரியாகத் தாக்கி‌ உள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

இது குறித்து நடத்துனர் வீர மணிகண்டன், சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்த சீர்காழி போலீசார், பேருந்திலிருந்த சிசிடிவி காட்சியின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் செம்மங்குடி பகுதியைச் சேர்ந்த மாதவன் மற்றும் பெயர் தெரியாத மூன்று பேர் தாக்குதலில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. 

முன்னதாக, மாதவன் மது போதையில் பேருந்தில் ஏறி பாடல்கள் மாற்றக் கூறியபோது நடத்துநருக்கும், மாதவனுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, நடத்துநர் மாதவனை பாதியில் கீழே இறக்கி விட்டதாகக் கூறப்படுகிறது. இந்த முன் விரோதம் காரணமாக கீழே இறங்கிய மாதவன், அவரது நண்பர்களுக்கு தொலைப்பேசி வாயிலாக அழைப்பு விடுத்து, இந்த தாக்குதலில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, சீர்காழி போலீசார் சிசிடிவி காட்சியின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.